கடந்த 2005 முதல் 2013 -ஆம் வருடம் வரை கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்தவர் 16-ம் பெனடிக்ட். இவர் கடந்த 2013 -ஆம் வருடம் போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகி உள்ளார். பின்னர் குரு மடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் போப் ஆண்டவர் பதினாறாம் பெனெட்டிக் இன்று காலமானார்.
Categories