Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் பணியில் சேர வாய்ப்பு”… கால நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியர் தகவல்….!!!!!!

முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் பணியில் சேர மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சென்ற 2014ஆம் வருடத்தில் பணியிலிருந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் இறந்தவர்களில் வாரிசுதாரர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பாளராக சென்ற ஜூன் 13 முதல் ஜூன் 18 வரை விருப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி விருப்ப விண்ணப்பம் அளித்து பணியில் சேராத முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் பணியில் சேர 2022 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி வரை காலம் நீட்டிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் சமர்ப்பிக்காத தகுதியானவர்கள் பணியில் சேர வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு பணியில் சேரலாம் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |