மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கநாதன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்டார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜனின் மனைவி கிட்டி குமாரமங்கலம். இவர் டெல்லியில் உள்ள வசந்த் விஹார் என்ற பகுதியில் வசித்து வருகிறார். திடீரென்று அவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் இவரை கட்டிப்போட்டு பணம் நகையை கொள்ளையடித்து மட்டுமல்லாமல், இவரது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார்.
இதற்கு கொள்ளை சம்பவத்திற்கு அவர்கள் அவர் வீட்டில் துணி துவைக்கும் பணி செய்து வந்த ராஜு என்பவரும், அவருக்கு உடந்தையாக இரண்டு பேரும் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ரங்கராஜன் குமாரமங்கலம் சேலம் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் எம்பியாக இருந்துள்ளார். தற்போது அவரது மனைவி கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.