பாகிஸ்தானின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் முன்னாள் மந்திரிகளை விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படுவோர் பட்டியலில் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான்கானின் மீது எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் ஷெபாஷ் ஷெரீப் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதாவது இம்ரான்கான் ஆட்சியிலிருந்த மந்திரிகளின் மீது ஊழல் புகார்கள் உள்ளதால் அவர்களை விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படுவோர் பட்டியலில் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஏனெனில் இவர்கள் ஊழல் புகாரிலிருந்து தப்பிப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்று விடக்கூடாது என்பதால் இந்த நடவடிக்கையை ஷெபாஸ் எடுத்துள்ளார்.