Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் திடீர் தற்கொலை…. பெரும் பரபரப்பு…!!!!

முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மா பாளையத்தை சேர்ந்தவர். 1983 இல் எப்எஸ்ஐ அதிகாரியாகத் தேர்ச்சி பெற்று வனத்துறையில் சென்னை உட்பட பல இடங்களில் பணிபுரிந்தார். சுற்றுச்சூழல் இயக்குனராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இதனை அடுத்து 2019 இல் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இவருடைய சொகுசு பங்களா, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 6 கிலோ தங்கம் ஆகிய பொருட்களை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் சொத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் இன்று வேளச்சேரியில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |