Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

முன்னாள் முதல்வரை விமர்சித்துப் பேசிய விஜயகாந்த்…. வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு..!!

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு வருகின்ற ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு தர்மபுரியில் தே.மு.தி.க சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி ஆகியோரை விமர்சித்துப் பேசியுள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் மீது தர்மபுரி மாவட்ட அமர்வு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டன. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த் கோர்ட்டுக்கு நேரில் வரவில்லை. விஜயகாந்துக்கு பதிலாக அவருடைய வக்கீல் காவேரிவர்மன் ஆஜராகியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, அடுத்த கட்ட விசாரணை வருகின்ற ஏப்ரல் மாதம் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |