Categories
மாநில செய்திகள்

முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்தில் திடீர் மாற்றம்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…..!!!!

தமிழகத்தில் ஒருமுறை கூட தோல்வியடையாத சட்டமன்ற உறுப்பினர் என்று சொன்னால் அது தி.மு.க முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிதான். அதாவது தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றியடைந்து இருக்கிறார். மேலும் 5 முறை தமிழகத்தின் முதல்வராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் சுமார் 39 வருடம் காலம் பதவி வகித்துள்ளார். சென்ற 2018ம் வருடம் ஆகஸ்டு மாதம் வயது முதிர்ந்த நிலையில் உடல்நலக் குறைபாடு காரணமாக கலைஞர் கருணாநிதி காலமானார்.

இதையடுத்து பல்வேறு  போராட்டங்களுக்கு பின், அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தினசரி கலைஞரின் நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கலைஞரின் செல்ல குழந்தை என்று வர்ணிக்கப்படும் முரசொலி நாளிதழ் அங்கு வைக்கப்படுவது வழக்கம் ஆகும்.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை விவாதத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோபுரத்துடன் கூடிய மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைசி வரைக்கும் கடவுள் மறுப்பாளராக இருந்தவரின் நினைவிடத்தில் தற்போது கோவில் கோபுரத்துடன் இந்து சமய அறநிலையத்துறை என்ற வாசகம் இடம்பெற்றுள்ளதை பார்த்த முற்போக்குவாதிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |