Categories
மாநில செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்…. விசாரணையை தொடங்கிய ஆறுமுகசாமி ஆணையம்….!!!!

உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து 2 1/2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் தொடங்குகிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து தமிழக அரசு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில் ஜெயலலிதா சம்மந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் விசாரணை இன்னும் முடிவடையாததால் தொடர்ந்து ஆணையத்தின் பதவிக் காலமும் நீடித்து வருகிறது.

இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை விசாரணைக்கு தடை கோரி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்ததால் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நடைபெறவில்லை. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், எய்ம்ஸ் இயக்குநா் நிகல் டாண்டன் தலைமையிலான மருத்துவக்குழுவை ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவும் வகையில் அமைக்க உத்தரவிட்டது. அதன்படி மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பில் அடுத்த கட்ட விசாரணை இன்று (மார்ச்.7) மீண்டும் தொடங்குகிறது. இந்த விசாரணையின் போது அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் நேரில் ஆஜராகிறார்.

Categories

Tech |