Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்…. அடுத்ததாக இபிஎஸ்-யிடம் விசாரணை?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. தற்போது வரை பலரிடமும் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து விசாரணை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில்,ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எடப்பாடி பழனிச்சாமி இடம் விசாரணை நடத்துவது குறித்து பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்தார்.

முன்னதாக ஓபிஎஸ்-யிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. “தனக்கு எதுவும் தெரியாது”என்று அவர் பதில் அறிவித்திருந்த நிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி அளித்த மனுவின் அடிப்படையில் அடுத்ததாக எடப்பாடி பழனிச்சாமி-யிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |