ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மகளிடம் அடையாளம் தெரியாத நபர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் முஃப்தி முகமது சையது என்பவர் முன்னாள் முதல் அமைச்சராக இருந்தவர் ஆவார். இவரின் மகள் ரூபையா செரிஃப் என்பவர் திருமணமாகி சென்னை ஆர்.ஏ.புரம் என்ற பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக் கொண்டிருக்கிறார். அவரது கணவர் வேளச்சேரியில் கார் விமான நிலையம் வைத்திருக்கின்றார்.இந்த நிலையில் ரூபியா செஃரிப் நேற்று அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது அலைபேசிக்கு அறிமுகம் இல்லாத மூன்று அலைபேசி எண்களில் இருந்து வந்திருந்த அழைப்பின் அடையாளம் தெரியாத நபர்கள், தொடர்ந்து மூன்று தினங்களாக மிக ஆபாசமான வார்த்தைகளை பேசி தொந்தரவு செய்வதாக கூறி அதனுடன் அவர்கள் தொடர்பு கொண்ட மூன்று அலைபேசி எண் களையும் சேர்த்து கொடுத்து இருக்கின்றார்.
அந்த புகாரின் பேரில், அபிராமபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அலைபேசி எண்ணை சைபர் கிரைம் காவல்துறையினரிடம் கொடுத்து அடையாளம் தெரியாத நபர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முன் ரூபியாவின் தந்தை முஃப்தி முகமது முதலமைச்சராக இருந்த போது பயங்கரவாதிகள் சிலர் அவரது மகளை கடத்திச் சென்று பிறகு விடுவித்த நிகழ்வு குறிப்பிடத்தக்கது.