Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“முன்னாள் ராணுவ வீரரின் மனைவி இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி”… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!!

முன்னாள் ராணுவ வீரரின் மனைவி இரண்டு குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகில் மாணிக்கனூர் கிராமத்தில் வசித்து வருபவர் முன்னாள் ராணுவ வீரர் மோகன். இவருடைய மனைவி 28 வயதுடைய பிரபா. இவர்களுக்கு 9 வயதுடைய ரித்திக் என்ற மகனும், 7 வயதுடைய ரக் ஷிதா என்ற மகளும் உள்ளார்கள். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி பிரபா தனது மகன், மகளுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து குழந்தைகள் மீதும் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்தார்.

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் பிரபா கூறியதாவது, தனது கணவர் மோகனை அவருடைய குடும்பத்தினர் ஏமாற்றி ஓய்வுபெற்ற பிறகு வந்த பணத்தை பறித்துக் கொண்டு தங்களுக்கு சொந்தமான வீட்டையும் தர மறுக்கிறார்கள். மேலும் பாகப்பிரிவினை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் வாழப்பிடிக்காமல் குழந்தையுடன் தற்கொலை செய்ய முயன்றதாக கூறினார். இது குறித்து காவேரிப்பட்டணம் காவல்துறையினருக்கு தகவல் அளித்து, அவர் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |