Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முன்னுக்கு பின் முரணான பதில்…. 3 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுகிராமம் குளத்தின் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்து தெரியவந்தது.

அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் குலசேகரன் புதூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் விக்னேஷ், கார்த்திகேயன் மற்றும் 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |