டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட இருக்கிறார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. தொடர்ந்து பேசிய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் சுகாதார துறை மூலமாக பிரச்சினையை சமாளித்து வருகின்றோம்.
தேர்தலை சுமூகமாக நடத்துவது மருத்துவர்கள், செவிலியர்கள் ,அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையுடன் தேர்தலை நடத்துகின்றோம். தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், முன் களப்பணியாளர்களுக்கு தலை வணங்குகின்றோம்.
கொரோனா காலத்தில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தியது மிகவும் சவாலாக இருந்தது. பேரவை தேர்தலில் முந்தைய தேர்தலை விட அதிக வாக்குகள் பதிவாகின. தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு நடத்தி ஆய்வு நடத்தினோம். தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள், அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது என தெரிவித்தார்.