Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்பகையால் வந்த விளைவு… பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… தலைமறைவான குற்றவாளி கைது…!!

முன்பகை காரணமாக பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த குற்றாவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள செய்யாமங்குலம் கிராமத்தில் குமாரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு வழிவிட்டாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த நீதிதேவன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் 27ஆம் தேதி வழிவிட்டாள் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்துள்ளார்.

அங்கு சென்ற நீதிதேவன் வழிவிட்டாளுடன் தகராறில் ஈடுபட்துள்ளார். இதனைதொடர்ந்து ஆத்திரமடைந்தத நீதிதேவன் அருகில் இருந்த கல்லை எடுத்து வழிவிட்டாளின் தலையில் போட்டு கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் படுகாயடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் வழிவிட்டாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற அபிராமம் காவல்துறையினர் விசாரணை நடத்தி நீதிதேவன் மீது வழக்குபதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் தீவிர விசாரணை நடத்தி ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் பதுங்கி இருந்த நீதிதேவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |