Categories
தேனி மாவட்ட செய்திகள்

முன்பகையால் வந்த விளைவு… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குற்றவாளிக்கு வலைவீச்சு…!!

முன்பகை காரணமாக தொழிலாளியை வீடு புகுந்து கத்தியால் தாக்கிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள கீழத்தெரு ஜாமீன் தோப்பு தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பரான மருதுபாண்டியன் என்பவருக்கும் கீழத்தெரு கள்ளர் பள்ளி அருகே வசித்து வரும் சன்னாசி என்பவருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்கு மருதுபாண்டிக்கு ஆதரவாக கண்ணன் இருந்ததால் சன்னாசி கண்ணனுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று சன்னாசி கண்ணன் வீட்டிற்கு சென்று அவரை தாகத முறையில் பேசி கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனையடுத்து பலத்த காயமடைந்த கண்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போடி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி கண்ணனை தாக்கிய சன்னாசி மீது வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவான சன்னாசியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |