Categories
தேனி மாவட்ட செய்திகள்

முன்பகையால் வந்த விளைவு…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. தொழிலாளி அதிரடி கைது….!!

முன்பகை காரணமாக பெண்ணை அரிவாளால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ஓடக்கரை தெருவில் பஞ்சு(35) என்ற பெண் வசித்து வருகிறார். அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான வடமல்ராஜ் (60) என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வடமல்ராஜ் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பஞ்சுவை வழிமறித்து தகராறு ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பஞ்சுவின் கையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண்ணை தாக்கிய வடமல்ராஜுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |