கோவை-பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா ரெயில் ஞாயிறு அன்றும்,பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் ரயில் சனிக்கிழமை அன்றும் ஏற்கப்படாது என்று தெற்கு ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது. கோவை மற்றும் பொள்ளாச்சி இடையே வருகிற 13-ஆம் தேதி முதல் தினசரி மாலை 6.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத ரயில், போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக இரவு 7.45 மணிக்கு பொள்ளாச்சியை அடையும். பொள்ளாச்சியில் இருந்து 14-ஆம் தேதி முதல் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் காலை 8.40 மணிக்கு கோவை செல்லும்.
இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படாது என்று புதிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இதனைப் போலவே பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் ரயில் 14ஆம் தேதி முதல் காலை 4.55 மணிக்கு புறப்படும். காலை 6.30 மணிக்கு பொள்ளாச்சியை வந்தடையும்.பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு ரயில் 13ம் தேதி முதல் இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு பாலக்காடு அடையும். இந்த ரயில் சனிக்கிழமை ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.