எரிபொருளின் விலை முன் இல்லாத அளவிற்கு 18% அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் உயர்ந்ததை அடுத்து டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் அதாவது 1000 லிட்டர் விமான எரிபொருள் 17 ஆயிரத்து 135 ரூபாய் உயர்ந்து ஒரு லிட்டர் 10, 666 ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் தொடர்ந்து 6வது முறை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை 36 ஆயிரத்து 643 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் ஒன்றாம் தேதி மற்றும் 16 ஆம் தேதியில் விமான எரிபொருள் விலை மாற்றியமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.