நாகையில் இரு தரப்பினரிடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
நாகையில் இருந்த மீனவர்கள் கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி பாதிப்பிற்கு பிறகு பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அதேபோல ஆரிய நாட்டு தெருவில் வசித்து வந்த மீனவர்களும் பல்வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு ஆரிய நாட்டு தெருவில் இருப்பவர்களுக்கும், மகாலட்சுமி நகரில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கும் மீனவ பஞ்சாயத்தார் பொறுப்பு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் மாலை 6 மணி அளவில் கடந்த 7-ஆம் தேதி மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு நாகை நகர பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து அவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களை நாகை அரசு மருத்துவமனையில் பார்க்க வந்த மீனாட்சி நகர் மீனவர்களையும் மருத்துவமனை வளாகத்தில் அரிவாளுடன் வெட்ட முயன்றுள்ளனர். இதுகுறித்து வெளிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.