திண்டுக்கல் அருகே பால் வியாபாரியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்ற மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலமரத்தடியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு நான்கு மகள்களும், பாப்பாத்தி என்ற மனைவியும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்துவிட்டு மாலப்பட்டி பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.
அதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். அதன் பின்னர் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தாலுகா காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலையில் வேறு ஏதும் காரணம் உள்ளதா ? முன்விரோதத்தால் நடந்ததா ? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.