மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூலித்தொழிலாளியை தம்பி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிதம்பரநாதபுரம் கிராமம் தோப்பு தெருவில் பாரதிதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிபாலன் என்ற மகன் இருந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு கவிதாசன் என்ற தம்பி உள்ளார். கவிபாலனுக்கும், கவிதாசனுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கவிபாலனுக்கும், கவிதாசனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சற்று தூரத்தில் உள்ள காளியம்மன் கோவில் அருகே கவிபாலன், கார்த்திக் என்பவருக்கு சொந்தமான வீட்டின் முன் பகுதியில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது கவிதாசன் நள்ளிரவு 12 மணி அளவில் தூங்கி கொண்டிருருந்த கவிபாலனை அரிவாளால் சரமாறியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. அதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கொள்ளிடம் காவல்துறையினர் கவிபாலனின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் கொலைக்கு காரணமான கவிதாசனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.