திருவள்ளூர் மாவட்டத்தில் அய்யனேரி கிராமத்தில் தசரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனான சரத்குமாருக்கு ஐந்து மாதத்திற்கு முன்பு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சரத்குமார் தனது மாமனாருடன் ஐபேடு கிராமத்திற்கு இறைச்சி வாங்க சென்றுள்ளார். அந்த கிராமத்தை சேர்ந்த சிலரிடம் சரத்குமாருக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து சரத்குமார் இறைச்சி வாங்கி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த கிராமத்தை சேர்ந்த தாமோதரன், கோபி, துரைப்பாண்டி, அசோக்பாண்டியன், குபேந்திரன், சதீஷ் ஆகிய ஆறு பேர் கொண்ட கும்பல் சரத்குமாரை வழிமறித்து சரமாரியாக அறிவாளால் வெட்டியுள்ளது.
இதில் சரத்குமார் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இது குறித்து அறிந்த சரத்குமாரின் தம்பி பரத் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் சரத்குமார் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து அசோக் பாண்டியன், துரைப்பாண்டி, தாமோதரன், கோபி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.