மணிமங்கலம் பகுதியில் முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் ஒன்று அறிவாளால் இரண்டு பேரை வெட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை அடுத்திருக்கும் மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ் மற்றும் சுரேந்தர். இவர்கள் இருவரும் மணிமங்கலம் அருகே இருக்கும் சிவன் கோவில் பகுதியில் இருந்த பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு அங்கே இருந்து தப்பி சென்றார்கள்.
இதுப்பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதுப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது. இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றார்கள்.