ஆலங்குடி அருகே முன்விரோதம் காரணமாக சிற்றுண்டி கடைக்கு தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே முன்விரோதம் காரணமாக சிற்றுண்டி கடைக்கு தீ வைத்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர் தீ வைக்கப்பட்ட கடையின் உரிமையாளராக நாகராஜன் ஆலங்குடி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார்.
இந்த கடை நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. ஆலங்குடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். கடைகளில் உள்ள 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. முன்விரோதம் காரணமாக சிலர் கடைக்கு தீ வைத்திருக்கப்படலாம் என்று நாகராஜன் தீச்சம்ப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.