Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் தான் காரணமா..? கொடூரமாக தாக்கப்பட்ட வாலிபர்… போலீஸ் தீவிர விசாரணை..!!

பெரம்பலூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்லத்தில் சற்குணராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ் (24) என்ற மகன் உள்ளார். மோகன்ராஜ் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். இந்நிலையில் தனது நண்பர்களான வேலூரை சேர்ந்த அரவிந்த், கோகுல்ராஜ், துறைமங்கலத்தைச் சேர்ந்த கிஷோர் ஆகியோருடன் நகராட்சி கிணறு அருகே மோகன்ராஜ் பேசி கொண்டிருந்தார். அப்போது சிலோன் காலனியைச் சேர்ந்த லோகேந்திரன், வேலூரை சேர்ந்த செல்லத்துரை, லோகேந்திரனுடைய தம்பி சசிகரன் என்றால் ரூபன் ஆகிய 3 பேரும் அங்கு வந்து பாட்டிலாலும், கற்களாலும் மோகன்ராஜை தாக்கியுள்ளனர்.

அப்போது மோகன்ராஜை கத்தியால் குத்த செல்லத்துரை முயற்சி செய்துள்ளார். அதனை மோகன்ராஜ் தடுத்துள்ளார். அதன் பின்னர் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அதில் மோகன்ராஜ்-க்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான மூன்று பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |