முன்விரோதத்தில் காய்கறி வியாபாரியை நண்பர்களே உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இருக்கும் உமச்சிகுளம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரசு மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கைகலப்பு ஏற்பட்டு மணிகண்டனின் நண்பர்கள் அவர் மீது தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டனர்.
உடல் முழுவதும் தீ பரவி அவரது அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அவர்கள் மணிகண்டனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை கொடுத்தும் இன்று காலை பரிதாபமாக மணிகண்டன் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதத்தில் உயிருடன் மணிகண்டனை பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.