Categories
தேசிய செய்திகள்

முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் : அமைச்சர் ராஜ்நாத் சிங்..!!

விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து பற்றி நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்தார்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து Mi 17 v5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.. அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் மேகம் சூழ்ந்து மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உட்பட 13 பேர் மரணமடைந்தனர்.. இந்த சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து பற்றி நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது, சூலூரில் 11: 48 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டரின் தகவல்தொடர்பு மதியம் 12 :08 க்கு துண்டிக்கப்பட்டது. வெலிங்டனில் பிற்பகல் 12 : 15 மணிக்கு ஹெலிகாப்டர் தரை இறங்க இருந்த நிலையில் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேர் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிபின் ராவத் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்படும். ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது குறித்து முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏர் மார்ஷல் மன்வேந்த்ரா சிங் தலைமையிலான குழு இந்த விசாரணையை மேற்கொள்ளும் என்றார்..

பிபின் ராவத் உட்பட 13 பேர் மறைவுக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

 

 

Categories

Tech |