Categories
தேசிய செய்திகள்

முப்படை வீரர்களே… மனமார்ந்த வாழ்த்துக்கள்… தமிழக கவர்னர்…!!!

நாட்டில் இன்று கொண்டாடப்படும் கொடி நாளை முன்னிட்டு முப்படை வீரர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இன்று நாடு முழுவதும் கொடி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கொடி நாள் என்பது போரின் போது, அமைதியை நிலைநாட்டுவதிலும் படைவீரர்கள் புரிந்த சாதனைகள் மற்றும் தியாகங்களை நன்றியுடனும், பெருமையுடனும் நாம் அனைவரும் நினைவு கூறுவதாகும். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 7ஆம் தேதி படை வீரர்களின் நலன் சார்பாக கொடி நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த பொன்னான நாளில் அனைத்து படைகளின், நிலையான பதவியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நல்லாசி களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் முப்படை வீரர்களின் கொடிநாள் நிதிக்கு மக்கள் நன்கொடை அளிக்க தாராளமாக முன்வர வேண்டும் என தமிழக மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |