Categories
தேசிய செய்திகள்

மும்பைக்கு திரும்பி வருபவர்களுக்கு…. கட்டாயம் பரிசோதனை…. மாநகராட்சி அதிரடி…!!!

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை கொண்டாடுவற்காக மும்பையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மும்பைக்கு திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு திரும்பி வரும் சூழ்நிலையில் கொரோனா தொற்று பரவிட கூடாது என்பதில் மும்பை மாநகராட்சி மிகவும் கவனமாக உள்ளது. அதன்படி விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றாலும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பி வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த பின்னரே மும்பை மாநகராட்சிக்குள் வர வேண்டும் என மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இதுக்குறித்து மும்பை மாநகராட்சி கூடுதல் ஆணையர் சுரேஷ் ககானி  நேற்று பேசுகையில், “விநாயகர் சதுர்த்தி திருவிழா முடிந்த அடுத்து வரும் 15 நாட்கள் மிகவும் முக்கியமானதாகும். சொந்த ஊருக்கு சென்று திரும்புவர்கள் 266 மையங்களில் இலவசமாக ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டை மும்பை மாநகராட்சிக்கு திரும்புபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும் அச்சோதனையின் முடிவுகளை அவர்களது வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்” என்று கூறினார்

 

Categories

Tech |