மும்பையில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் தலைநகர் மும்பையில் மாநகராட்சி சார்பில் 309 முகாம்களும், மாநில அரசு சார்பில் 20 முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 13ஆம் தேதி வரை மும்பையில் ஒரு கோடியே 33 லட்சத்து 13 ஆயிரத்து 138 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 47 லட்சத்து 52 ஆயிரத்து 723 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை மாநகராட்சி சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என தெரிவித்துள்ளது. நாளை வழக்கம் போல் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .தடுப்பூசி இன்று செலுத்தாமல் இருப்பதற்கு காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் தசரா பண்டிகையை காரணமாக தடுப்பூசி முகாம்கள் செயல்படாமல் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.