மும்பையில் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகின்றது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இதற்காக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கியமான ஆறு இடங்களில் நடக்கிறது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மும்பையில் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்ய பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறது. மும்பையில் ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில் மும்பையில் நடக்க இருந்த போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்யப்பட உள்ளன. இதை தொடர்ந்து கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடர் நடத்துவது குறித்தும் அச்சம் எழுந்துள்ளது.