மராட்டிய மாநிலமான மும்பையின் வடக்குப் பகுதிகளில் இன்று ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.
மராட்டியம் மாநிலமான மும்பையில் வடக்கு பகுதியில் 108 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்ற பகுதிகளில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 என்ற அளவாக பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து தற்போது வரை எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. மும்பையில் கடந்த சில நாட்களாகவே லேசான நில நடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டிருப்பதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.