Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பை அணியின் புதிய ஜெர்சி… இந்த ஜெர்சி எப்படி இருக்கு…? வெளியான வீடியோ..!!

மும்பை அணியின் புதிய ஜெர்சி புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இந்த தொடருக்கான வீரர்களின் புதிய ஜெர்சியை “one team one family one jersey” என்ற பெயரில் மும்பை அணி வெளியிட்டுள்ளது. மேலும் மும்பை நகரத்துடன் அணியை இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளது.

இந்த ஜெர்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சென்னை அணியின் ஜெர்சி வெளியாகி சென்னை ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது மும்பை அணியின் ஜெர்சி வெளியாகியுள்ளது.

Categories

Tech |