மும்பை தாக்குதலில் தொடர்புடைய ராணாவை நாடுகடத்த அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல் யாரும் மறந்துவிட முடியாது. கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த லக்ஷர் இ தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல், நரிமன் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 166 அப்பாவிகள் கொல்லப் பட்டனர். அதில் ஆறு அமெரிக்கர்களும் அடங்குவர்.
300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் உயிரோடு பிடிக்கப்பட்டு அவர் தூக்கிலிடப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பயங்கரவாதி தஹாவூர் ராணா அமெரிக்காவில் பிடிபட்டார். அவரை நாடு கடத்திக் கொண்டு வர இந்தியா முயற்சி செய்து வந்திருந்தது.
இந்நிலையில் தீவிரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா சம்மதித்துள்ளது. இதற்கு மூளையாக செயல்பட்ட ஹாட்லிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ராணாவை ஒப்படைக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.