மகாராஷ்டிராவின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை மாநகரின் பல இடங்களில் மழை ஓயாததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதல் அரபிக் கடலில் ஒட்டிய மகாராஷ்டிராவில் மழை பேய்கிறது. கடந்த சில வாரங்களாக மழை தீவிரம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த மழையால் ஏற்கனவே பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தலைநகர் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையின் தீவிரம் மீண்டும் அதிகரித்துள்ளது. கிங்சர்கள் பகுதிகள் சுரங்க பாதை மைதானங்கள் சாலைகள் என பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மும்பை மாநகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.