Categories
உலக செய்திகள்

மும்பை விவகாரம்: இவ்ளோ நாளா “கண்ணுல மண்ணத் தூவுனவர” கண்டுபிடிச்சாச்சு…. “இந்தியாவிற்கு” நாடு கடத்தப்படுவாரா…? வெளியான தகவல்….!!

மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த அதிபயங்கர குண்டு தாக்குதலில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியின் நெருங்கிய கூட்டாளி ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் போட்டுக்கொடுத்த பிளானின் அடிப்படையில் அடுத்தடுத்து 12 இடங்களில் அதிபயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் 257 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்கள்.

இதற்கு மூல காரணமான தாவூத் பாகிஸ்தானில் தலைமறைவாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவருடைய நெருங்கிய கூட்டாளியான அபு பக்கரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அபுபக்கர் பிரபல நிழல் தாதா தாவுத் இப்ராஹிம் வீட்டில் மும்பையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தொடர்பாக சதித் திட்டம் தீட்டியதில் ஈடுபட்டுள்ளார். இவர் விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |