வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 1¼ கோடிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்க வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 2,500 மூட்டை மஞ்சளை கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பங்கேற்று போட்டிபோட்டு மஞ்சளை ஏலத்தில் எடுத்து சென்றுள்ளனர்.
அதன்படி விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 6,666 க்கும் அதிகபட்ச விலையாக 10,043 க்கும், உருண்டை ரக மஞ்சள் 6,589 ரூபாயில் இருந்து 8,069 ரூபாய்க்கும், பனங்காலி ரக மஞ்சள் 10,102 ரூபாயில் இருந்து 19,689 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மொத்தம் 1¼ கோடிக்கு மஞ்சள் ஏலம் விடப்பட்டுள்ளது.