வழக்கம்போல நடைபெற்ற பருத்தி மற்றும் எள் ஏலத்தில் மொத்தம் 9 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் பிடி ரகம் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 7,500 ரூபாயில் இருந்து 10,689 ரூபாய் வரை விற்பனை செய்யபட்டுள்ளது. அதன்படி மொத்தம் 2,50,000 ரூபாய்க்கு ஏலம் போனது.
இதனையடுத்து நடைபெற்ற எள் ஏலத்தில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு 101.10 முதல் 128.70 வரையிலும், சிவப்பு எள் 14.30 முதல் 117.30 வரையிலும் வெள்ளை எள் 124.30 முதல் 125.60 வரை ஏலம் விடப்பட்டுள்ளது. மேலும் 80 மூட்டை எள் ஏலம் விடப்பட்ட நிலையில் மொத்தம் 6 1/2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.