Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்… போட்டிபோட்ட வியாபாரிகள்… 22 லட்சத்திற்கு விற்பனை…!!

கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கத்தில் வழக்கம்போல நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 510 மூட்டை மஞ்சள் விற்பனை செய்யபட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அருகே உள்ள ராசிபுரம் தாலுகாவில் உள்ள கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பில் சங்க கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்துகொண்டு போட்டி போட்டு மஞ்சளை ஏலம் எடுத்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்துகொண்டு தாங்கள் விளைவித்த மஞ்சளை மூட்டை மூட்டையாக ஏலத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அதன் அடிப்படையில் உருண்டை ரக மஞ்சள் குவிண்டால் ஓன்று 5,612 ரூபாயில் இருந்து 6,889 ரூபாய்க்கும், விரலி ரக மஞ்சள் 6,199 ரூபாயில் இருந்து 8,580 ரூபாய்க்கும், பனங்காலி ரக மஞ்சள் 2,512 ரூபாயில் இருந்து 5,062 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்தம் 510 மூட்டை மஞ்சள் ஏலம் போன நிலையில் 22 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது.

Categories

Tech |