Categories
உலக செய்திகள்

முயலுடன் போட்டி போட்ட உணவு பிரியர்…!!! வென்றது முயலா….? அல்லது உணவு பிரியரா….? சுவாரஸ்ய தகவல் இதோ….!!

லூயிஸ் மோசஸ் என்பவர் சாலட் உணவு உண்ணும் போட்டியில் கலந்து கொள்வதற்காக தான் வளர்த்த இரண்டு ராட்சத முயல்களை அழைத்து வந்து தோல்வியை தழுவினார்.

லூயிஸ் மோசஸ் என்பவர் சாலட் உணவு உண்ணும் போட்டியில் கலந்து கொள்வதற்காக தான் வளர்த்த இரண்டு ராட்சத முயல்களை அழைத்து வந்திருந்தார். இந்த போட்டியை சாப் ஸ்டாப் என்ற உணவகம் ஏற்பாடு செய்திருந்தது. உணவு பிரியரான ரெய்னா ஹூவாங் இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது லூயிஸ் அவர் வளர்த்த Honey என்ற முயலை முதலில் களமிறங்க செய்தார். அப்போது அந்த முயல் அவர் எதிர்பார்த்த வகையில் எதையுமே சாப்பிடவில்லை. Honey என்ற முயல் தோல்வியை சந்தித்த நிலையில் போட்டி ஏற்பாட்டாளர்களின் அனுமதிபெற்று, அடுத்ததாக precious என்ற முயலை  களமிறக்கினார்.

ஆனால் அந்த முயலும் ஒரு இலையை கூட சாப்பிடவில்லை. உணவு உண்ணும் போட்டிக்கு முயல்களை அழைத்து வந்த லூயிசுக்கு தோல்வியே கிடைத்தது. இதுகுறித்து அவர் பேசுகையில் இந்த தோல்வி எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை என்றும் முயல்கள் எப்போதும் தேவைக்கேற்ப குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மட்டும் தான் உணவுகளை உண்ணும் என்றும் நாய்களைப் போல இல்லாமல் குறைந்த அளவே உணவை உண்ணக் கூடியது என்றும் கூறினார். இப்போட்டியில் ஒன்றரை கிலோ சாலடை பத்தே நிமிடங்களில் உணவு பிரியரான ரெய்னா ஹுவாங் சாப்பிட்டு முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |