Categories
அரசியல் மாநில செய்திகள்

முரட்டு மனநிலை வேண்டாம்… அரசுக்கு இது அழகல்ல…. இனியும் வச்சு பாக்காதீங்க… ஸ்டாலின் வேண்டுகோள் …!!

இ பாஸ் நடைமுறையை உடனே ரத்து செய்திடுக என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்… இ-பாஸ் நடைமுறையை நீட்டித்து மக்களை துன்புறுத்தி வருவது அடுக்கடுக்கான எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது. ஐந்தாவது மாதமாக அவசர தேவைகளுக்கு கூட மக்கள் நகர முடியாமல்  அல்லலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். திருமணம், மருத்துவ சிகிச்சை, உயிரிழப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது இ-பாஸ் நிராகரிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதுமே இ-பாஸ் வழங்குவதில் தாராளமாக ஊழல் அரங்கேறி வருகிறது. ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் வித்திடும் வெளிப்படைத் தன்மை இல்லாத இ- பாஸ் நடைமுறையை முறை ஊரடங்கில் யாருக்குப் பயன்படுகிறது.அமைச்சர்களும், முதலமைச்சரும் போனால் போதும். வயிற்றுப் பிழைப்பு தேடி, இறுதிச்சடங்கில் பங்கேற்க கூட போக வேண்டியதில்லை என்ற முரட்டு மனநிலை அரசுக்கு அழகல்ல. மத்திய அரசே இ-பாஸ் கட்டாயம் இல்லை என்று அறிவித்த பிறகு அதிமுக அரசு உள்நோக்கத்துடன் வைத்திருப்பது ஏன் ?

வேலைக்கு போகலாம், கம்பெனிகள் திறக்கலாம் என அறிவித்துள்ள நிலையில் மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி இ-பாஸ் என்று அறிவித்திருப்பது என்ன வகையான நிர்வாகம். இ-பாஸ் நடைமுறையை தோல்வி அடைந்துவிட்டது, செயற்கையான  செயற்கையான தடையை ஏற்படுத்தி, ஊழல் முறைகளுக்கு கதவைத் திறந்து வைத்து மக்களை இன்னல்படுத்திட வேண்டாம். இ-பாஸ் நடைமுறை இனியும் தேவையற்றது என்று மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |