Categories
உலக செய்திகள்

முருகனின் அருளை பெற…. அவருடைய பக்தர்கள் கட்டாயம் இதை செய்யுங்கள்…!!

முருக பெருமானை வழிபட கூடிய பக்தர்கள் இந்த பாடலை சொல்லி வழிபட்டால் கட்டாயம் முருகனின் அருள் கிடைக்கும்.

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் தமிழ் கடவுளாக முருகப் பெருமானை வழிபடுகிறார்கள்.  அவரின் பிறப்பே சூரசம்ஹார நிகழ்விற்காக தான். முருகப் பெருமானின் ஆலயங்களில் முக்கிய விழாவாக கருதப்படுவது கந்த சஷ்டி விழாவாகும். இந்த விழா கடந்த 15 ஆம் தேதி அன்று தொடங்கியதையடுத்து 6 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு விழாவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார ஆராதனையும், பூஜைகளும், காப்பு கட்டிக் கொள்ளும் வைபவங்களுக்கு நடைபெற்று ஆறாவது நாளாகிய இன்று சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.

இதையடுத்து நாளை முருகனுக்கு திருக்கல்யாண நிகழ்வு நடைபெறும். இந்த ஆறு நாட்களும் முருக பக்தர்கள் அனைவரும் உண்ணாமல் பக்தியோடு விரதம் இருந்து முருகனை நினைத்து உருகி வழிபட்டு கந்த கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அலங்காரம் என பாடல்களைப் பாடி வருவார்கள். அந்த வகையில் ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம குரு ஆகியன நிகழும் ராசிக்காரர்கள் கட்டாயம் சொல்ல வேண்டிய பாடல் என்னவென்றால்,

“நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த

கோளென்  செயுன்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு

தாளுஞ் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமுந்

தோளும் கடம்பும் மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.”

இந்த பாடலில் 27 நட்சத்திரங்களும் அடங்கியுள்ளது. இந்த பாடலை பாடி வருவதால் நிச்சயம் பல நன்மைகள் கிடைக்கும்.

Categories

Tech |