Categories
மாநில செய்திகள்

முருகனுக்கு அரோகரா போட்ட பாஜக தலைவர்… கைது செய்த போலீஸ்… தொண்டர்கள் ஆவேசம்…!!!

திருத்தணியில் தடையை மீறி பாஜக வேல் யாத்திரையை தொடங்கி வைத்த அக்கட்சியின் தலைவர் எல்.முருகனை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் இருந்து பாஜக சார்பாக இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்க படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த யாத்திரை முருக பெருமானின் அறுபடை வீடுகள் இருக்கின்றன கரங்கள் வழியாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. அதில் பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் பாஜக வினர் வெற்றிவேல் யாத்திரைக்கு கட்டாயம் அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதனால் தமிழக அரசு சார்பாக பாஜகவின் வெற்றி வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று நேற்று அறிவிக்கப்பட்டது. அதனால் திருத்தணி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வேல் யாத்திரை தொடங்க இருக்கின்ற நிலையில் பாஜக நிர்வாகிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருக்கின்ற தனது இல்லத்தில் இருந்து திருத்தணிக்கு பேருடன் புறப்பட்டு சென்ற தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து முடித்தார். இதனையடுத்து திருத்தணியில் தடையை மீறி தொடங்கப்பட்ட வேல் யாத்திரையை போலீஸ் படையினர் தடுத்து நிறுத்தினர். அது மட்டுமன்றி அதனை தொடங்கி வைத்த மாநிலத்தலைவர் முருகனை கைது செய்தனர். மேலும் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளையும் கைது செய்து போலீசார் பேருந்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

 

Categories

Tech |