Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முருங்கைக்காயை சாப்பிட்டா….” இந்தப் பிரச்சினைகள் எல்லாம் குணமாகுமாம்”… உங்களுக்கு தெரியுமா..?

முருங்கக்காய் குறித்து சிறப்பு பயன்களை இதில் நாம் பார்க்கப் போகிறோம்.

காய்கறிகளில் முக்கியப் பங்கு வகிப்பது முருங்கக்காய். அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு காய். இதில் இயற்கையாகவே பல சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலைத் தூய்மைப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இந்த முருங்கைக்காயில் உள்ளது. முருங்கைக்காயில் சாறு எடுத்து பசும் பாலுடன் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். இதன் மூலம் உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

கர்ப்பிணி பெண்கள் முருங்கை காயை சாப்பிட்டல் பிரசவத்திற்கு பின் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கும். பசியை அதிகரிக்க இது உதவுகிறது. முருங்கையில் இரும்பு , கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை சூப் செய்து குடித்தால் இருமல், தொண்டை வலி, நெஞ்சு எரிச்சல் நீங்கும். முருங்கைக்காயை வேகவைத்து அதில் வருகிற ஆவியே சுவாசித்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். முருங்கைகாய் சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவு பெறும், மினுமினுப்பாக இருக்கும்.

Categories

Tech |