Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முருங்கைக்காய் பறித்த பெண்…. மின்சாரம் தாக்கிய பலியான சோகம்…. பரபரப்பு சம்பவம்….!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் அய்யனார் குளம் வடக்கு தெருவில் கட்டிட தொழிலாளியாக கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநீத முருகேஸ்வரி(38) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை முருகேஸ்வரி தனது வீட்டில் இருக்கும் முருங்கை மரத்தில் இரும்பு கம்பியை பயன்படுத்தி முருங்கைக்காய் பறித்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதால் முருகேஸ்வரி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற முருகேஸ்வரியின் மகன் கார்த்திகேயன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அந்த சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |