பிரண்டையின் மூலிகை குணங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
உடலில் உள்ள எந்த பகுதியில் நோய் ஏற்பட்டாலும் மன நோயை அகற்றும் ஆற்றல் கொண்டது பிரண்டை. பிரண்டையை துவையலாக செய்து சாப்பிட்டால் பசியை தேடுபவர்களுக்கு அனுபவமிக்க மாமருந்தாகும்.
அல்சர் வயற்றுப்புண் நோயுள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தினால் அல்சர் அதிகமாகிவிடும். அது குணமான பிறகு பயன்படுத்திவந்தால் அல்சர் நோய் வரவே வராது.
எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் பிரண்டைத் துவையலை அதிகம் பயன்படுத்திக் கொண்டே வந்தால் முறிந்த எலும்புகள் விரைவில் ஒன்றுகூடி மிகவும் பலன் பெற்று குணமாகும்.
குளிர்ச்சியால் ஏற்படும் சளியை குணமாக்கும். குடலில் ஏற்படும் வாவை அகற்றுவதோடு, வயிற்றில் உள்ள புழுக்களையும் கொன்றுவிடும்.
பேதி, வாந்தி, சீதபேதி, நுரைத்த பச்சைப் பேதி காணும் சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் காரம் குறைத்து செய்த துவையலை சாப்பிடுவதால் முழுமையான குணம் தெரியும்.
வாய்ப்புண், வாய் நாற்றம், நாக்கு, உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் குணமாகும். மலத்துடன் இரத்தம் வெளியேறும் சிலருக்கு பிரண்டையை பயன்படுத்தும் பொழுது குணமாகிவிடும்.
பிரண்டைத் துவையலை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது நரம்புத்தளர்ச்சி, பலவீனம், தாது இழப்பு தீரும். அதிக பசி எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பயன்படுத்தலாம். பிரண்டையின் கொழுந்துகளுடன் அதற்கு கீழுள்ள சற்று முற்றின பிரண்டையின் தண்துகளை எடுத்து சுத்தப்படுத்தி பயன்படுத்தினால் அதிக பசி எடுக்கும்.