முன்னாள் அதிபர் முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் கடன்கள் மற்றும் வரிச்சலுகைகளை பெறுவதற்காக அதிகாரிகளை தவறாக வழி நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள அட்டார்னி ஜெனரல் அலுவலகத்தில் டிரம்ப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டிரம்ப் சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் அட்டார்னி ஜெனரல் நடத்திய விசாரணை சூனிய வேட்டை என்று டிரம்ப் விமர்சித்துள்ளார். இதனையடுத்து விசாரணைக்கு ஒத்துழைக்காதது குறித்து டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் பல வருடங்களாக கடுமையாக உழைத்தும் எந்த ஒரு பலனும் இல்லை. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சலுகைகள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க மறுத்து விட்டேன் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அட்டார்னி ஜெனரல் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் அதிபர் டிரம்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் எந்த கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்கவில்லை. அட்டர்னி ஜெனரல் எப்போதும் உண்மையை மட்டுமே வழி நடத்திச் செல்வார். எனவே எங்களுடைய விசாரணை தொடரும் என்று கூறியுள்ளார்.