Categories
உலக செய்திகள்

முறையற்ற காதல்… பல நாளாக வீட்டிலிருந்து வெளியில் வராத பெண்… இளைஞர் செய்து கொண்டிருந்த செயல்…!!

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவரை அவரின் காதலர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனை சேர்ந்த 62 வயதுடைய பெண் Tina Eyre. இவர் கடந்த நான்கு வருடங்களாக பல்கேரியாவில் 26 வயதுடைய ஒரு இளைஞருடன் வாழ்ந்து வருகிறார். இவர் பிரிட்டனில் 17 வருடங்களாக சட்டத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அதன்பின் தான் Tina பல்கேரியாவிற்கு குடியேறியுள்ளார். இந்நிலையில் Tina கடந்த பல நாட்களாகவே வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்துள்ளார்.

மேலும் அலைபேசி அழைப்புகளையும் ஏற்கவில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் தபால் நிலைய தலைவரான பெண் ஒருவர் பிரிட்டன் மக்கள் சிலரிடம் அவரின் வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரின் வீட்டிற்கு சென்று பார்த்த சில மக்கள் பார்த்தபோது அந்த வீட்டிலிருக்கும் தோட்டத்தில் அந்த இளைஞர் குழி தோண்டி கொண்டிருந்திருக்கிறார்.

அவரிடம் Tina பற்றி கேட்ட போது சரியாக பதிலளிக்காமல் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனால் வீட்டிற்குள் சென்று பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Tina அங்கு ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்துள்ளார். Tinaவின் காதலரான அந்த இளைஞர் Tinaவை புதைப்பதற்காகத்தான் குழி தோண்டியுள்ளார் என்பது தெரிந்தவுடன் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பின்பு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் Tina மீது பொறாமை கொண்டதால் அவரை கொலை செய்ததாக கூறியுள்ளார். மேலும் அந்த இளைஞர் Tinaவை அடித்து கொன்று விட்டு அதே மண்வெட்டியால் குழிதோண்டியிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |