மகாராஷ்டிரா மாநிலத்தின் பாலகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 26 வயது பழங்குடியின பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கனமழை மற்றும் ஆம்புலன்ஸ் வாகன கிராமத்திற்குள் வர முடியாத நிலையில் மார்க்கட்வாடி கிராமத்தில் இருந்து பிரதான சாலைக்கு 3 கிலோமீட்டர் தூரம் அளவுக்கு துணியால் கட்டப்பட்ட தற்காலிக ஸ்ட்ரக்சர் அமைத்து மெயின் சாலைக்கு கொண்டு வந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த பிறகு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். ஆனால் குழந்தைகள் பிறக்கும்போது இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மேலும் முறையான சாலை இருந்திருந்தால் அந்த பெண்ணுக்கு விரைவில் மருத்துவ சிகிச்சை அளித்து குழந்தைகளை காப்பாற்றலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பெரும்பாலும் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல இயலாத தொலைதூரக் கிராமங்களில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பத்தின் 8 வது அல்லது 9 வது மாதத்திலிருந்து கோடவா பிஎச்சி மருத்துவமனைக்கு மாற்றி வருவதாக மருத்துவர்கள் கூறினார்கள். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கோவிந்த் போட்கே கடந்த வாரம் பகுதிக்கு சென்று சாலை அமைக்கும் பணியை தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்று கூறப்படுகிறது.