நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனி சட்ட மன்ற தொகுதியில் உள்ள போதமலை கிராமத்தில் கீழுர், மேலூர், கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளன. கீழுர் ஊராட்சிக்குட்பட்ட இந்த மலை கிராமத்தில் 453 ஆண் வாக்காளர்கள், 449 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 902 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலை ஒட்டி கீழுர் கெடமலை ஆகிய 2 கிராமங்களில் தனித்தனியாக வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கீழுர் கிராமத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாததால் ராசிபுரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்கு பதிவு இயந்திரங்கள், மை, எழுதுபொருள் உள்ளிட்ட உபகரணங்களை தேர்தல் அதிகாரிகள், வருவாய் உதவியாளர்கள் மலையடிவாரத்தில் இருந்து தலை சுமையாக போலீஸ் பாதுகாப்புடன் ஒத்தையடி பாதையில் கொண்டு சென்றனர்.